கோவில் கும்பாபிஷேகம்
கோவில் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் நகரில் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வனசங்கரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனையொட்டி அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. விழாவில் இன்று யாகசாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் எடுத்து வரப்பட்டு காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ராமநாதபுரம் சொக்கநாதர் ஆலய பரம்பரை ஸ்தானிகர் மனோகர சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை சமஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிபிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான்பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.