அறநிலையத்துறைக்கு சொந்தமான 1,820 சதுரஅடி இடம் மீட்பு

திருவாரூர் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 1,820 சதுரஅடி இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
திருவாரூர் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 1,820 சதுரஅடி இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு நிலங்கள்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.இதன்பேரில் தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறையின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் ரூ.ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இடம் மீட்பு
திருவாரூர் அருகே கேக்கரையில் ராமர் பாதம் பட்ட இடமாக திகழ்ந்துவரும் விசுவநாதர் கோவிலின் முன்பாக இருந்த இடம் கடந்த 20 ஆண்டுளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் அரசு உத்தரவுப்படி இந்த ஆக்கிரமிப்பு இடம் மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதற்கிடையே இந்து மக்கள் கட்சி சார்பில் ஆக்கிரமிப்பினை அகற்றுமாறு கோவில் நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு மனுக்கள் அளிக்கப்பட்டன.இதைத்தொடா்ந்து திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தலைமையில் வைப்பூர் போலீசார் உதவியுடன் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் 1820 சதுரஅடி அளவு கொண்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வேலி அமைத்தனர். மேலும் இந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்றும் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.






