காரனோடை அருகே பழுதடைந்த நிலையில் காணப்படும் கோவில் ராஜகோபுரம் - சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை


காரனோடை அருகே பழுதடைந்த நிலையில் காணப்படும் கோவில் ராஜகோபுரம் - சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
x

காரனோடை அருகே பழுதடைந்த நிலையில் காணப்படும் கோவில் ராஜகோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த காரனோடை அருகே உள்ளது புதிய எருமைவெட்டிபாளையம் கிராமம். இங்கு 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சியம்மாள் உடனுறை ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரம் 4 விமானங்களை கொண்டுள்ளது. தற்போது இந்த கோவில் பராமரிப்பில்லாமல் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்து வருகிறது.

கோபுரத்தில் பல வகையான செடிகள் வளர்ந்து கோபுரத்தின் வெளித்தோற்றம் முழுவதும் தெரியாத அளவுக்கு பொழிவிழந்து காணப்படுகிறது. மேலும் கோபுரத்தில் அங்காங்கே விரிசல்களும் உள்ளது.

இந்த கோவிலுக்கு பிரதோஷ விழா, பவுர்ணமி விழா, சிவராத்திரி உள்பட பல்வேறு விழா நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்ரீவரமூர்த்தீஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பழமைவாய்ந்த இந்த கோவிலை பக்தர்களின் நலன் கருதி கோவில் ராஜகோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பித்து வர்ணம் பூசி பாதுகாக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story