தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை தினக்கூலி பணியாளர்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா, பொருளாளர் ராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்வளத்துறையில் தற்காலிகமாக பணிபுரியும் அனைத்து தினக்கூலி பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கும் அரசு சம்பந்தமான அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story