பழனி காந்தி மார்க்கெட்டுக்கு தற்காலிக கடைகள் தயார்


பழனி காந்தி மார்க்கெட்டுக்கு தற்காலிக கடைகள் தயார்
x
தினத்தந்தி 25 April 2023 1:00 AM IST (Updated: 25 April 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி காந்தி மார்க்கெட்டுக்கு தற்காலிக கடைகள் தயார் நிலையில் உள்ளது.

திண்டுக்கல்

பழனி பெரியகடைவீதி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு மளிகை, காய்கறி, இறைச்சி என பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. மார்க்கெட் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் சேதம் அடைந்து காணப்பட்டது. எனவே மார்க்கெட் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடைகள், வாகன நிறுத்தம், கழிப்பறை என அனைத்து வசதிகளுடன் ரூ.12 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

மார்க்கெட் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால் அங்குள்ள கடைகள் தற்காலிகமாக உழவர்சந்தை அருகே உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்ற நகராட்சி முடிவு செய்தது. இதற்காக ரூ.60 லட்சத்தில் 76 தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகள் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணிகள் ஏறக்குறைய முடிவு பெற்றதால் கடைகள் தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்காலிக கடைகள் தயார் நிலையில் உள்ளன. விரைவில் மார்க்கெட் கடைகள் இங்கு மாற்றப்பட உள்ளது. அரசு விதிகளின்படி வாடகை வசூல் செய்யப்படும் என்றார்.


Next Story