திருச்செங்கோட்டில் ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில்  ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
x

திருச்செங்கோட்டில் ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.7,123 முதல் ரூ.9,723 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.6,423 முதல் ரூ.7,379 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.12,866 முதல் ரூ.18,300 வரை விற்பனை ஆனது. மொத்தம் 1,200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story