நாமக்கல்லில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


நாமக்கல்லில் ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் 1,500 பருத்தி மூட்டைகள் ரூ.48 லட்சத்திற்கு ஏலம் போனது.

பருத்தி மூட்டைகள்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 17-ந் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக ஏலம் நடைபெறவில்லை.

அதற்கு பதிலாக நேற்று முன்தினம் நாமக்கல்லில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதன்படி 1,500 பருத்தி மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

ரூ.48 லட்சத்திற்கு ஏலம்

இந்த மூட்டைகள் அனைத்தும் ரூ.48 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனை சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

இதனிடையே ஆர்.சி.எச். ரக பருத்தி விலை ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.7,020 முதல் அதிகபட்சமாக ரூ.9,069 வரை ஏலம் போனது. டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8,389 முதல் அதிகபட்சமாக ரூ.8,851 வரை ஏலம் போனது. கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.4,300 முதல் அதிகபட்சமாக ரூ.7,399 வரை ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.


Next Story