அரூரில்ரூ.20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
தர்மபுரி
அரூர்:
அரூர் கச்சேரி மேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 90 விவசாயிகள் 300 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்தனர். இதில் விரலி ரக மஞ்சள் ரூ.5,409 முதல் ரூ.7,169 வரையும், குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ.4,009 முதல் ரூ.5,009 வரையிலும், தோள் மஞ்சள் ரூ.9,269-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 20 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
Related Tags :
Next Story