பொதுக்குழுவில் பதற்றம்...! ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற சொல்லி அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம்


பொதுக்குழுவில் பதற்றம்...! ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற சொல்லி அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2022 11:03 AM IST (Updated: 23 Jun 2022 11:06 AM IST)
t-max-icont-min-icon

தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர்.

சென்னை

அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கூட்டம் நடைபெறவுள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தடைந்தார்.

இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், மாற்றுப்பாதை வழியாக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அங்கு குவிந்திருந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். திருமண மண்டபத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் வெளியேற சொல்லி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.திருமணமண்டபத்தில் பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள்! பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளாத பழனிசாமி ஆதரவாளர்கள். ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்கள் துரோகி என முழக்கமிட்டதால் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார் வைத்திலிங்கம்!

தொடண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைஅச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர்.

அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே மேடையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story