போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பாலபந்தல் போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக குமரவேல் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணியில் இருக்கும்போது சரிவர சீருடை அணியாமல் இருந்து வந்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான புகார் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்றது. இதையடுத்து குமரவேலுவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.


Next Story