மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து


மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து
x

மறைமலைநகர் பசுமை உரக்குடிலில் பயங்கர தீ விபத்து ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பசுமை உரைக்குடில் அருகே நேற்று இரவு அங்கிருந்த மர கட்டைகளில் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி அணைத்தனர். இருந்த போதிலும் அங்கிருந்த மரக்கட்டைகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனால் அந்த பகுதி பயங்கர புகை மூட்டமாக காணப்பட்டது. எனவே குடியிருப்பு வாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் அங்கு எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story