பேரிடர் எச்சரிக்கை செய்தியை செல்போனுக்கு அனுப்பி சோதனை
பேரிடர் எச்சரிக்கை செய்தியை செல்போனுக்கு அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் தெரிவித்தார்.
திண்டுக்கல்
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில், அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாடு சரிபார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையால், செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் பேரிடர்கால எச்சரிக்கை செய்தி இன்று (வெள்ளிக்கிழமை) செல்போன்களுக்கு அனுப்பி சோதனை செய்யப்படுகிறது.
இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். மேலும் எந்தவித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் இந்த சோதனை நடக்கிறது என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story