வந்தே பாரத் ரெயில் சேலம் வழியாக 2-வது சோதனை ஓட்டம்


வந்தே பாரத் ரெயில் சேலம் வழியாக 2-வது சோதனை ஓட்டம்
x

கோவை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேலம் வழியாக 2-வது சோதனை ஓட்டம் நடந்தது.

சேலம்

சூரமங்கலம்

கோவை- சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை வருகிற 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 30-ந் தேதி நடந்தது. தற்போது 2-வது சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த ரெயில் சென்னையில் இருந்து நேற்று காலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.08 மணிக்கு சேலம் வந்தடைந்தது. இங்கிருந்து காலை 9.13 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 11.40 மணிக்கு கோவை சென்றடைந்தது. அங்கிருந்து காலை 12.10 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2.15 மணிக்கு சேலம் வந்தடைந்தது. இங்கிருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்றது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ெரயில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ெரயிலில் சென்னையில் இருந்து ெரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்து ெரயில்வே தண்டவாள உறுதித்தன்மை, சிக்னல்கள், பாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.


Next Story