டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு


டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு
x

டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எவ்வாறு மதிப்பெண்களை தெரிந்து கொள்வது என்பது பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் நடைபெற்றது.

ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர். 6 முதல 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் வகுப்புகளை எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2/ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.trb.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story