கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்ட போதுஜவுளி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலிஉறவினர்கள் சாலைமறியல்; சேலம் அருகே பரபரப்பு


கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்ட போதுஜவுளி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலிஉறவினர்கள் சாலைமறியல்; சேலம் அருகே பரபரப்பு
x
சேலம்

இளம்பிள்ளை

சேலம் அருகே கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து ஜவுளி தொழிலாளி பலியானார். இதனால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜவுளி தொழிலாளி

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோவில் பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவருடைய மகன் ராமன் (வயது24), ஜவுளி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சித்தர்கோவில் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது அந்த கடை முன்பு இருந்த இரும்பு குழாயை தொட்ட போது ராமன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ராமன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

சாலை மறியல்

இதனிடையே ராமனின் உறவினர்கள் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மதியம் சித்தர் கோவில் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ரகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் ராமனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஜவுளி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story