ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் கைது


ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 12:45 AM IST (Updated: 5 Oct 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

மானாமதுரை

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் மானாமதுரை ெரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தாய் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்

காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க கோரியும், காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் தாய் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வம், நிறுவனர் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ெரயில் நிலையம் நோக்கி சென்றனர்.

பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ெரயில் நிலைய முகப்பில் அவர்களை தடுத்து நிறுத்தி 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.


Next Story