துறைக்குடி காளியம்மன் கோவிலில் தைமாத திருவிழா நடைபெற்றது.


துறைக்குடி காளியம்மன் கோவிலில் தைமாத திருவிழா நடைபெற்றது.
x

கூத்தாநல்லூர் அருகே உள்ள துறைக்குடி காளியம்மன் கோவிலில் தைமாத திருவிழா நேற்று நடைபெற்றது.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள துறைக்குடி காளியம்மன் கோவிலில் தைமாத திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிளியனூரில் இருந்து பக்தர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து, சிவன், பார்வதி, காளி வேடமிட்டு ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், வில்வ பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவிய பொருட்களால்அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story