தாளவாடி பஸ் நிலைய மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது- பயணிகள் உயிர் தப்பினர்
தாளவாடி பஸ் நிலைய மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது- பயணிகள் உயிர் தப்பினர்
ஈரோடு
தாளவாடி
தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் செல்வதற்கு தாளவாடி பஸ் நிலையம் வந்து செல்வது வழக்கம். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் நேற்று மாலை பஸ்சுக்காக ஏராளமானோர் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்குள்ள மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுந்தது. பயணிகள் யார் மீதும் விழாததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தாளவாடி பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுவது தொடர் கதையாகி வருகிறது. பெரும் விபத்து ஏற்படும் முன்பு பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story