3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்


3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் 524 பேருக்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் 524 பேருக்கு வழங்கப்பட்டது.

தாலிக்கு தங்கம்

சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம், கலப்பு திருமண உதவி திட்டம், விதவை மகள் திருமண உதவி திட்டம், விதவை மறுமணம் உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் தாலிக்கு தங்கத்திற்கு 8 கிராம் வழங்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2018- 19-ம் நிதியாண்டு மற்றும் 2019-20-ம் நிதியாண்டில் இந்த திட்டங்களின் மூலம் பயன்பெற விண்ணப்பித்த பயனாளிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் 8 கிராம் தங்கம் வழங்கும் பணி இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை தலைமை தாங்கினார்.

524 பேருக்கு...

இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு என மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களை சேர்ந்த 524 பயனாளிகள் கலந்து கொண்டனர். அவர்கள் காலை 8 மணியளவிலேயே வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகம் பின்புறம் கார்கள் நிறுத்தும் இடம் அருகில் காத்திருந்தனர்.

பின்னர் ஒவ்வொரு ஒன்றிய அலுவலர்கள் மூலமாக பயனாளிகள் பட்டியலில் பெயர்களின் வரிசையின் படி சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரிசையாக தாலிக்கு தங்கத்திற்கான 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் சமூக நலத்துறை அலுவலகத்தில் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

தாலிக்கு தங்கம் பெற வந்த பயனாளிகள் கலெக்டர் அலுவலகம் பின்புறம் குவிந்து இருந்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story