முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கம் தென்னரசு, முத்துசாமி..!


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கம் தென்னரசு, முத்துசாமி..!
x

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , முத்துசாமி வாழ்த்து பெற்றனர்.

சென்னை,

செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளனர்.

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதான நிலையில் அவர் வசமிருந்த துறைகள் இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர நிர்வாக ரீதியான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , முத்துசாமி வாழ்த்து பெற்றனர்.செந்தில் பாலாஜி 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கிய நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தங்கம் தென்னரசு , முத்துசாமி வாழ்த்து பெற்றனர்.

1 More update

Next Story