பிரதமர் மோடி மீது அளப்பரிய அன்பு காட்டியதற்கு தமிழ் மக்களுக்கு நன்றி - அண்ணாமலை டுவீட்


பிரதமர் மோடி மீது அளப்பரிய அன்பு காட்டியதற்கு தமிழ் மக்களுக்கு நன்றி - அண்ணாமலை டுவீட்
x

பிரதமர் மோடி மீது அளப்பரிய அன்பு காட்டிய தமிழ் மக்களுக்கு நன்றி என அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். ஐதராபாத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 467 கோடி ரூபாய் 2.36 லட்சம் சதுர மீட்டரில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்பணித்தார்.

ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது பிரதமர் மோடியை , மலர் தூவி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை - கோவை இடையேயான 'வந்தே பாரத்' ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மீது அளப்பரிய அன்பு காட்டிய தமிழ் மக்களுக்கு நன்றி என அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் வணக்கம் மோடி என்ற ஹேஸ்டேக் 1 மில்லியன் டுவீட்களை கடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.


Next Story