மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி


மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி
x

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆற்காடு ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷானவாஸ், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடத்தில் பேசிய ஒன்றியக்குழு உறுப்பினர் காஞ்சனா சேகர் பேசுகையில் கிளாம்பாடியில் ஆதி திராவிடர் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி அமைத்து தரவேண்டும் என்றார். சுலோச்சனா சண்முகம் பேசுகையில் கூராம்பாடி கிராமத்தில் சிமெண்டு சாலை பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்யவேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தலைவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, பயணிகள் நிழற்கூடம் அமைப்பது, சாம்பசிவபுரம், வளவனூர் ஊராட்சிகளில் பழுதடைந்துள்ள அங்கான்வாடி கட்டிடங்களை இடித்து அப்புறபடுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story