புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்


புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல்
x

புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருவள்ளூர்

பொன்னேரி அடுத்த ஞாயிறு ஊராட்சியில் அடங்கியது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கூறி பலமுறை அதிகாரிகளுக்கும் ஊராட்சிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கடந்த 4 மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் கிடைக்கவில்லை. ரேஷன் கடை இல்லை. தெரு விளக்குகள் எரியவில்லை. மண் சாலையாகவே உள்ளதை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

எந்த அதிகாரிகளும் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த சோழவரம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமன்னன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஊராட்சிமன்ற துணைத்தலைவர் ஜனர்த்தனன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற துணை தலைவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


Next Story