கந்து வட்டி வசூலித்ததாக பேரூராட்சி துணை தலைவர்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு


கந்து வட்டி வசூலித்ததாக  பேரூராட்சி துணை தலைவர்-மனைவி  உள்பட 3 பேர் மீது வழக்கு
x

கந்து வட்டி வசூலித்ததாக பேரூராட்சி துணை தலைவர்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கந்து வட்டி வசூலித்ததாக பேரூராட்சி துணை தலைவர்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கந்து வட்டி வசூல்

திருவட்டார் அருகே உள்ள மூலச்சல் ஆலுவிளையை சேர்ந்தவர் சீமான். இவர் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் விலவூர் பேரூராட்சி துணை தலைவர் ஞானஜெபின் (வயது 37), அவருடைய மனைவி பெனிலா மற்றும் ஞானஜெபினின் நண்பர் அஜிமோன் ஆகிய 3 பேரும் கந்து வட்டி வசூலிப்பதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

குமரி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். இதனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா, சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞானஜெபின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் கடன் பத்திரம் மற்றும் ஆவணங்கள் இருந்துள்ளன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

வழக்குப்பதிவு

அதைத் தொடர்ந்து ஞானஜெபின், அவருடைய மனைவி பெனிலா, அஜிமோன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஞானஜெபின் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறாா்கள்.


Next Story