தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் நவராத்திரி நிகழ்ச்சி
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது.
இளையான்குடி
நவராத்திரி விழா
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது. அன்றைய தினம் அனுக்ஞை கும்பம் வைத்து சந்தன அலங்காரம் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. 16-ந்தேதி கும்பம் வைத்து சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையும், 17-ந்தேதி சங்காபிஷேகமும் நடக்கிறது.
18 மற்றும் 19-ந் தேதி மாலை மீண்டும் கும்பம் வைத்து சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையும், 20-ந்தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 21 மற்றும் 22-ந்தேதி கும்பம் வைத்து சந்தன அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜையும், 23-ந்தேதி ஆயுதபூஜை அன்று சரஸ்வதி பூஜை மற்றும் வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. 24-ந்தேதி விஜயதசமி அன்று வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சந்தன அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடசேன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவிளக்கு பூஜை
இதேபோல் சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட அரண்மனை ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 15-ந்தேதி முதல் தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. 15-ந்தேதி சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மன் ராஜாங்க அலங்காரம், கன்யாகுமரி, சிவபூஜை, அன்னபூரணி, மீனாட்சி, கருமாரியம்மன், லட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, சரஸ்வதி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரத்தில் எழுந்தருளிகிறார்.
கலை நிகழ்ச்சிகள்
17 மற்றும் 18-ந்தேதி லட்சார்ச்சனையும், 20-ந்தேதி திருவிளக்கு பூஜையும், 21 மற்றும் 22-ந்தேதி ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டியும், 23-ந்தேதி ஆண்களுக்கான இரட்டையர் இறகுபந்து போட்டியும் நடைபெறுகிறது. மேலும் தினமும் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் கண்காணிப்பாளர் வேல்முருகனும், சிறப்பு பூஜைகளை ஹரிமுத்துக்குமார் ஆகியோரும் செய்து வருகின்றனர்.