100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்


100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்


100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி பகுதியில் மின்மயானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பணிகளை தடுத்து அரசிற்கும், பேரூராட் சிக்கும் எதிராக தவறான கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சுரங்க பாதை

கோவை மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள் ளிங்கிரி அளித்த மனுவில், கோவை பீளமேட்டில் சுரங்க பாதையு டன் கூடிய ரெயில்வே மேம்பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை சுரங்கபாதை அமைக்கப்படவில்லை.

இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே இங்கு உடனடியாக சுரங்க பாதை அமைக்க வேண்டும். பீளமேடு பயனீர் மில் ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிப் பிட வசதி இல்லாததால் குழந்தைகள் ஆசிரியைகள் அவதிப்படு கின்றனர்.

மேலும் அங்கு உடைந்த ஜன்னல்களை சீரமைத்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

வீட்டுமனை பட்டா

சுண்டக்காமுத்தூர் எம்.ஜி.ஆர். தோட்டம் பகுதியை சேர்ந்த பெண்கள் கைகளில் பாசி மணி கோர்த்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், நாங்கள் கோவிலுக்கு சொந்த மான இடத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.

தற்போது எங்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த தால் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே எங்களுக்கு வேறு இடத்தில் இலவச வீட்டு மனை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

100 நாள் வேலை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் சுதா தலைமையில் அளித்த மனுவில், புதிதாக உருவாக்கப்பட்ட மதுக்கரை நகராட்சியுடன் திருமலையாம்பாளையம், மாரிசெட் டிபதி, காளியாபுரம் போன்ற கிராமங்கள் இணைக்கப்பட்டன.

இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் 100 நாள் வேலை உறுதி அளிப்பு வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story