100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும்


100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும்
x

100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்


விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.89 கோடியில் இருந்து ரூ.60 கோடியாக குறைத்து விட்டது. மேலும் பணி தளங்களில் பணி மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஊதிய பட்டுவாடாவிலும் தாமதம் ஏற்படும் நிலையில் பயனாளிகள் வங்கிகளுக்கு சென்று நேரடியாக பணம் எடுக்க வேண்டிய நிலையில் ஊதியம் தாமதமானால் அவர்களின் வங்கிக் கணக்கும் முடங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் தற்போது சாத்தியமில்லாத ஜி.பி.எஸ். மூலம் திட்டச் செயல்பாட்டினை கண்காணிக்கும் நடவடிக்கை அமல்படுத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கான இத்திட்டத்தினை முடக்கும் மனப்போக்கினை கைவிட வேண்டும். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான மத்திய அரசின் பங்கான ரூ.359 கோடியை முதலில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால் தான் திட்டப்பணிக்கான டெண்டர் விடுவதற்கு சாத்தியப்படும் என இத்திட்ட நிர்வாக இயக்குனர் தெரிவித்தார். எனவே அதற்கான நடவடிக்கைகளை முதல் கட்டமாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழி சாலையில் கலெக்டர் அலுவலக வளாகம், படந்தால் விலக்கு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story