50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படும்


50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படும்
x

50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி நகர மன்ற உறுப்பினர் கே.எஸ்.ஏழுமலை சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில் தற்போது தேசிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்போதே கழிவுநீர் கால்வாய் அமைத்தால்தான் பொதுமக்கள் பயன் படுத்த முடியும். எனவே பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பொதுமக்களின் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story