பா.ஜனதா பதாகை சேதம்; போலீசில் நிர்வாகிகள் புகார்


பா.ஜனதா பதாகை சேதம்; போலீசில் நிர்வாகிகள் புகார்
x

பா.ஜனதா பதாகை சேதப்படுத்தப்பட்டது குறித்து போலீசில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.

புதுக்கோட்டை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை சுற்றுப்பயணத்தில் வருகிற 6-ந் தேதி புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி புதுக்கோட்டை பா.ஜனதா சார்பில் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அரசு மகளிர் கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையை மர்ம ஆசாமிகள் கிழித்து சேதப்படுத்தியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜனதா நகர தலைவர் லட்சுமணன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

1 More update

Next Story