தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x

தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன.

குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

தேசத்திற்கான சேவை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது. இதன் மூலம் இராணுவத்திற்கு திறமை மிக்க வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அக்னிபத் திட்டம் பல நாடுகளில் உள்ளது. இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

சென்னை காசிமேடு உள்ளிட்ட நாட்டில் 5 துறைமுகங்களை அதிநவீன சர்வதேச துறைமுகங்களாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story