பால்முறை திருவிழா தொடக்கம்


பால்முறை திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 7 Aug 2023 1:30 AM IST (Updated: 7 Aug 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பால்முறை திருவிழா தொடக்கம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி கந்தவேல் லே அவுட்டில் ஸ்ரீமன் அய்யா நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் 12-ம் ஆண்டு பால்முறை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு, அன்னதானம், மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, அன்னதானம் நடக்கிறது. மாலை அய்யா உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) அய்யாவுக்கு பால்முறை வைபவம் நடத்தி, இனிமம் வழங்கும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வசந்தி, கிருஷ்ணன் மற்றும் அய்யாவழி பக்தர்கள் இணைந்து செய்து உள்ளனர்.


Next Story