மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை கண்டித்து பா.ஜனதாவினர் நூதன போராட்டம்


மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை கண்டித்து பா.ஜனதாவினர் நூதன போராட்டம்
x

மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை கண்டித்து பா.ஜனதாவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வசூலிக்கப்படுவதை கண்டித்து பா.ஜனதா மாவட்ட அரசு தொடர்பு அணி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு பிச்சை பாத்திரம் வைத்து மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையிலான நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஒரு மதுபாட்டிலுக்கு எதற்காக கூடுதல் தொகை வசூலிக்கிறீர்கள், அந்த தொகை யாருக்கு செல்கிறது என ஊழியர்களை பார்த்து கேள்வி எழுப்பியதோடு, கூடுதல் தொகை வசூலிப்பதற்கு பதிலாக பிச்சை எடுத்து கொள்ளுங்கள் என கூறியபடி கோஷமிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார், பா.ஜனதாவினரை கைது செய்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story