தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 1:00 AM IST (Updated: 24 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி

கூடலூர்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகர செயலாளர் ரவி தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் நளினி சேகர், முருகன், பார்த்திபன், வக்கீல் அணி பாஸ்கரன், முத்து உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதேபோல் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட செறுமுள்ளி, குற்றி முற்றி பகுதியில் மண்டல் தலைவர் சுதாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அருண் வரவேற்றார். ஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செருமுள்ளி சந்திரன், மற்றும் மாவட்டத் தலைவர் சிவக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story