வார விடுமுறை நாட்களில் படகு இல்லத்தை திறக்க வேண்டும்
வால்பாறையில் படகு இல்லத்தை வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் படகு இல்லத்தை வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படகு இல்லம்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் வாழைத் தோட்டம் புதிய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பன உள்பட பல்வேறு காரணங்களுக்காக படகு இல்லம் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் வால்பாறையில் கோடை விழாவையொட்டி படகு இல்லம் திறக்கப்பட்டது. அப்போது வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதன் பின்னர் மீண்டும் படகு இல்லம் மூடப்பட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திறக்க வேண்டும்
இதனால் வார விடுமுறை நாட்களில் வால்பாறை படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களில் மட்டுமாவது படகு இல்லத்தை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது இந்த படகு இல்லம்் மட்டும் தான் எனவே ந்த படகு இல்லத்தை முழுநேர செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.