பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம்
பெரும்பாலை அருகே பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்:
பெரும்பாலை அருகே பாதி எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது. அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண் பிணம்
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை நரசிபுரம் சுடுகாட்டில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பெரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
மேலும் இறந்த வாலிபர் யார்? என்பது குறித்தும் அவர் கொலை செய்யப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் எதற்காக அவர் எரிக்கப்பட்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்பாலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.