'தினத்தந்தி' பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை


தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை
x

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் ‘தினத்தந்தி’ பதிப்பகத்தின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நேற்று தொடங்கிய புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 'தினத்தந்தி' பதிப்பகத்தின் புத்தகங்கள் 18 ஏ அரங்கில் விற்பனையாகிறது. இதில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், தமிழ் சினிமா வரலாறு பாகம் 1, வரலாற்றுச்சுவடுகள் பாகம் 1 முதல் 4 வரை ஆகிய புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. நம்ப முடியாத உண்மைகள், கேள்வியும் நானே பதிலும் நானே, பழகிப்பார்ப்போம் வாருங்கள், தூரமில்லை தொட்டுவிடலாம், இதுவும் கடந்து போகும், நமக்குள் சில கேள்விகள், இளமையில் வெல், நதிபோல ஓடிக்கொண்டிரு, நீங்களும் தலைவர் ஆகலாம், உஷாரய்யா உஷாரு, ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள், பரபரப்பான வழக்குகள், நோய் தீர்க்கும் சிவாலயங்கள், 23 தோஷங்கள் பரிகார ஆலயங்கள், அறிவோம் இஸ்லாம், ஆலய வழிபாடு ஏன்? எதற்கு? எப்படி?, சிறகை விரிக்கும் மங்கள்யான், சிகரம் தொடும் சிந்தனைகள், செய்தி தரும் சேதி, ஆதிச்சநல்லூர்-கீழடி மண் மூடிய மகத்தான நாகரிகம், மருத்துவ பூங்கா, நலம் தரும் மூலிகை சமையல், வாழ்வை வளமாக்கும் பூஜை-விரதமுறைகள் உள்பட 53 வகையான புத்தகங்கள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. புத்தக கண்காட்சியில் பங்கேற்றவர்கள் 'தினத்தந்தி' பதிப்பகத்தின் புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


Next Story