சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை


சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை
x

சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி

பாலியல் தொல்லை

திருச்சியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2019-ம் ஆண்டு 2-ம் வகுப்பு படித்து வந்தான். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெயிண்டரான பிரதீபன் (வயது 33), அந்த சிறுவனை தனது வீட்டுக்கு கடத்திச்சென்று அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரதீபனை கைது செய்தனர்.இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக பிரதீபனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் சிறுவனை வீட்டிற்குள் அடைத்து வைத்த குற்றத்துக்காகவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காகவும் தலா ஒரு ஆண்டு சிறை, தலா ரூ.500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், கடத்திச்சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அத்துடன் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story