சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஒர்க் ஷாப் தொழிலாளி
கோவை நீலாம்பூர் அருகே அரசூர் காலனியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 25). தொழிலாளி. இவர், கோவையை அடுத்த கோவில் பாளையம் அருகே ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் அந்த ஒர்க் ஷாப் உரிமையாளரின் வீட்டிற்கு சென்று சாப்பாடு வாங்கி வருவது வழக்கம்.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி ரகுபதி, ஒர்க் ஷாப் உரிமையாளர் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லை. 11 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
சிறுமி பலாத்காரம்
அப்போது திடீரென்று வீட்டுக்குள் சென்ற ரகுபதி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச்சென்றார். பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி அழுதார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரகுபதிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார்.
இதை தொடர்ந்து ரகுபதியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.