காணிக்கையை திருடிய சிறுவன் கைது


காணிக்கையை திருடிய சிறுவன் கைது
x

திருச்சி சகாயமாதா ஆலயத்தில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய சிறுவன் கைதுசெய்யப்பட்டான்

திருச்சி

திருச்சி சகாயமாதா ஆலயத்தில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய சிறுவன் கைதுசெய்யப்பட்டான்.

உண்டியல் பணம் திருட்டு

திருச்சி பாலக்கரை எடத்தெருவில் சகாய மாதா பசிலிக்கா ஆலயம் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை 16 வயது சிறுவன் உடைத்து, ரூ.2 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டான்.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கீழபுலிவார்டு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story