உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்


உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
x

திருமால்பூரில் கனமழை காரணமாக உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

மழையால் உடைந்த பாலம்

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூரில் பனப்பாக்கம்-பள்ளுர் செல்லும் சாலையில் விருதசீர நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் பனப்பாக்கம், திருமால்பூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அரக்கோணம், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை, பள்ளி, கல்லூரி செல்வோர் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

மேலும் தற்போது சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலை பணிகள் அந்த பகுதியில் நடைபெற்றுவருவதால் கனரக வாகனங்கள் உடைந்த பாலத்தின் மீது செல்வதால் மேலும் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த பாலத்தின் வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். உடைந்த பாலத்தை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story