தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி கொலை


தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி கொலை
x

குடித்து விட்டு வேலைக்கு செல்லாததை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கட்டிட மேஸ்திரி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகன் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

மனைவியை தாக்கினார்

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 50), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மஞ்சுளா. இவர்களின் மகன் யுவராஜ் (26). கடந்தசில நாட்களாக கோபி சரியாக வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கோபியை வேலைக்கு செல்லுமாறு மனைவி மஞ்சுளா கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோபி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி, வீட்டில் இருந்த பொருட்களை கோபி உடைத்ததோடு, மகன் யுவராஜ் கண்முன்னே மஞ்சுளாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

தலையில் கல்லை போட்டு கொலை

இதனை மகன் யுவராஜ், தடுத்துள்ளார். இதில் கோபி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது கோபி இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார், யுவராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story