கார் தீப்பிடித்து எரிந்தது


கார் தீப்பிடித்து எரிந்தது
x

காரியாண்டியில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் மணிகண்டன் (வயது 22). கார் டிரைவர். சம்பவத்தன்று மணிகண்டன் காரில் நெல்லைக்கு சென்று விட்டு, பின்னர் வடக்கு விஜயநாராயணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது காரியாண்டி கோழிப்பண்ணை அருகே திடீரென கார் தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்தி தீயை அணைக்க முயன்றார். அப்போது பலத்த காற்று வீசியதால் தீ வேகமாக பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனை அறிந்த வடக்கு விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story