கியாஸ் நிரப்பும்போது காரில் தீப்பிடித்தது
பொள்ளாச்சியில் கியாஸ் நிரப்பும்போது காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் கியாஸ் நிரப்பும்போது காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரில் தீ
பொள்ளாச்சி-உடுமலை ரோட்டை சேர்ந்தவர் டேனியல். இவர் தனது காருக்கு கியாஸ் நிரப்புவதற்கு நேற்று முன்தினம் இரவு பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு கியாஸ் விற்பனை நிலையத்திற்கு வந்தார். அங்கு காருக்கு ஊழியர்கள் கியாஸ் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனே விற்பனை நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பெரும் சேதம் தவிர்ப்பு
இதற்கிடையில் கார் உரிமையாளர் டேனியல் செய்வதறியாது திகைத்தார். தீடீரென்று அவர் கியாஸ் நிரப்பும் இடத்தில் இருந்து காரை தீயுடன் தள்ளி விட்டார். கார் சிறிது தூரம் சென்று அங்கு இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். கியாஸ் விற்பனை நிலையத்தை சுற்றிலும் திருமண மண்டபம், குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.