பெண் மீது கார் மோதி கவிழ்ந்தது


பெண் மீது கார் மோதி கவிழ்ந்தது
x

நொய்யல் அருகே பெண் மீது கார் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கரூர்

கார் கவிழ்ந்தது

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவரது மனைவி காந்திமதி (வயது 50). இவர் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தளவாபாளையம் பகுதியை சேர்ந்த பாரி (32) என்பவர் ஓட்டி வந்த கார், காந்திமதி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காந்திமதி மற்றும் காரின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பாரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

வழக்குப்பதிவு

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாரி மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து சாமியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story