தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது


தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:45 AM IST (Updated: 8 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூரில் தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கோவை


சிங்காநல்லூரில் தாறுமாறாக ஓடிய கார், கடைக்குள் புகுந்தது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.


என்ஜினீயர்


கோவையை அடுத்த சூலூரை சேர்ந்தவர் சூர்யகுமார். என்ஜினீயர். இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவர் நேற்று காலை மருத்துவமனைக்கு செல்வதற்காக சூலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.


சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே வாகனங்கள் அதிகமாக சென்று கொண்டு இருந்தன. அப்போது காரை கட்டுப்படுத் துவதற்காக பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை சூர்யகுமார் அழுத்தியதாக தெரிகிறது.


இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது கார், சாலையில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு சாலையோரத்தில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் மீது ஏறி அருகே இருந்த கடைக்குள் புகுந்து சாய்ந்தபடி நின்றது. அதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


2 பேர் படுகாயம்


கார் மோதியதில் சாலை ஓரத்தில் சென்று கொண்டு இருந்த சிந்துஜா (வயது23), மோட்டார் சைக்கிளில் சென்ற தினேஷ்குமார் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிந்துஜா கால் முறிந்து ஆபத்தான நிலையில் உள்ளார். தினேஷ்குமார் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.


காரை ஓட்டி வந்த சூர்யகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கடைக்குள் புகுந்த கார் மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக என்ஜினீயர் சூர்யகுமார் மீது கிழக்கு பகுதி போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story