சிறுபாலம் கட்ட தோண்டியபோது உடைந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்
ராணிப்பேட்டையில் சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டையில் சிறு பாலம் கட்ட தோண்டியபோது காவிரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்காதது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபாலம் அமைக்கும் பணி
ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், வாலாஜாப்பேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை வக்கீல் தெருவின் முடிவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் கால்வாயை கடக்க சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை இந்த பணியின்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் பீறிட்டு ஆறாக வெளியேறி கால்வாயில் சாக்கடை நீருடன் கலந்து செல்கிறது. குழாய் உடைப்பு குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேதனை
பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் கவனக்குறைவாக சிறுபாலம் அமைக்க தோண்டியது காரணம் என்றும் இதனை அதிகாரிகள் சரி செய்யாதது வேதனை அளிப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள் இதனை விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.