ராஜாமடம் கிளை வாய்க்கால் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்தது


ராஜாமடம் கிளை வாய்க்கால் கடைமடை பகுதிக்கு காவிரி நீர் வந்தது
x
தினத்தந்தி 24 Jun 2023 1:19 AM IST (Updated: 24 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தஞ்சை வந்து ராஜாமடம் கிளை வாய்க்கால் கடைமடை பகுதிக்கு வந்தது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாதி, பாளமுத்தி, சாந்தாங்காடு ஊராட்சிகளில் காவிரி நீர் டெல்டா பாசனத்திற்கு வருவதற்காக தூர்வாரப்பட்டு தயாராகி வைக்கப்பட்டிருந்தன. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தஞ்சை வந்து ராஜாமடம் கிளை வாய்க்கால் கடைமடை பகுதிக்கு வந்தது. இந்த தண்ணீர் ராஜாமடம் வாய்க்கால் மூலம் பட்டுக்கோட்டை கடைமடை பகுதி வரை செல்கிறது. இதனால் சாந்தாங்காடு, வெட்டிக்காடு, ஏனாதி ஆலடிக்குமுளை, கொண்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏராளமான விளைநிலங்கள் விவசாய பாசனத்திற்கு தயாராகி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story