செல்போன் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
செல்போன் நிறுவனம் ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரூர் தாந்தோணிமலையை சேர்ந்தவர் அன்புத்தேன். முதுகலை பட்டதாரியான இவர் தனியார் செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டை பயன்படுத்தி வந்தார். அதற்கான மாதாந்திர தொகையை செலுத்த சென்றபோது ஊழியர் ஒருவர், புதிய பிளான்கள் வந்துள்ளன என்றும், அந்த பிளானில் சேர்ந்தால் அதிக பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பிளானில் அன்புத்தேன் சேர்ந்த பிறகு அவர் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது 'சிம்' கார்டையும் முடக்கியதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அன்புத்தேன் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய நீதிபதிகள் மேற்கண்ட வழக்கு தொடர்பாக செல்போன் நிறுவனத்துக்கு அன்புத்தேன் செலுத்திய கட்டணத்தை வட்டியுடன் அவருக்கு திருப்பித்தர வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.