குறிப்பிட்ட துணி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய மத்திய அரசு தடை


குறிப்பிட்ட துணி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய மத்திய அரசு தடை
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கைத்தறி தொழிலை பாதுகாக்க குறிப்பிட்ட துணி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கைத்தறி தொழிலை பாதுகாக்க குறிப்பிட்ட துணி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

கைத்தறி தொழில்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையத்தின் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், தமிழக அரசின் கைத்தறி ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி பேட்டு பார்டருடன் கூடிய சேலை, வேட்டி, துண்டு, அங்கவஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி ஜமுக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் போன்றவற்றை கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை அமல்படுத்த கைத்தறி துறையால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கடும் நடவடிக்கை

அரசின் தடை உத்தரவை மீறி இந்த ஜவுளி ரகங்களை உற்பத்தி, விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவாளர்களின் இடர்பாடுகளை களைந்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்று பயனடைய வேண்டும்.

கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டத்தில் கக்கன் தெரு, செனாய் நகரில் உள்ள உதவி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தை அணுகலாம் அல்லது சென்னை கைத்தறி ஆணையரக அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 98846-97637, 89369-97637 என்ற எண்களில் வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Related Tags :
Next Story