தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் ரூ.10¾ லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது -அண்ணாமலை


தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் ரூ.10¾ லட்சம் கோடி திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது -அண்ணாமலை
x

பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி எப்போதும், தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டுள்ளார். அதற்கு கடந்த 9 ஆண்டுகளில் அவர் எடுத்த நடவடிக்கைகளே சான்று. பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை திசை திருப்பும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக மிகைப்படுத்தப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட புயல் தாக்கத்தின்போது அந்த மாநில அரசு கேட்ட ரூ.9 ஆயிரத்து 836 கோடியில், மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடி வழங்கியது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றுள்ளது. அதேநேரம், குஜராத் மாநிலத்திற்கு 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.

கொரோனா பாதிப்பின்போது தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.868 கோடியை மானியமாக வழங்கியது. குஜராத்திற்கு ரூ.304 கோடி மட்டுமே வழங்கியது. இவைகள் சில உதாரணங்கள் மட்டுமே. பிரதமர் மோடி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் மானியங்கள், மத்திய நிதியுதவி திட்டங்கள் உள்பட பல திட்டங்கள் மூலம் தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடி பெற்றுள்ளது.

இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியைவிட 2 மடங்கு அதிகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story